தற்போது சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல்கள் தீர்மானிக்கப்படுவதால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.
பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய NPPயின் பொலிட்பீரோ உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, பாரம்பரிய அரசியலில் இருந்து உலகம் விலகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களால் தேர்தல் தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“தற்போதைய நிலைமை இதுவாக இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் NPP உள்ளது. எதிர்வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கின்றோம்” என ஹந்துநெத்தி தெரிவித்தார்.
NPP பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் முடியும் என்று கூறிய அவர், முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள், வணிக சமூகம் மற்றும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு கட்சி முன்னுரிமை அளிக்கும் என்றார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். (நியூஸ் வயர்)
Leave feedback about this